அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடித்த ‛மாமனிதன்' படம் ஆஹா ஓடிடி தளத்தில் கடந்த 15ம் தேதி வெளியானது. இதுவரை பத்து மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது. மாமனிதன் படத்தில் எளிய மனிதர்களின் பிள்ளைகள் தனியார் கல்வி நிறுவனத்தில் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்பது மையமாக இடம் பெற்றிருக்கும்.
இதனைத் தொடர்ந்து பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய 5 மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் கல்வி கற்பதற்காக, ஓராண்டு கல்விக் கட்டணத்தை நன்கொடையாக வழங்குவதாக ஆஹா நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு விஜய் சேதுபதி கல்வி உதவி தொகையை வழங்கினார்.