Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் ஜெயிலர் கிளிம்ப்ஸ் வீடியோ தயாராகிறது!

24 ஜூலை, 2022 - 05:54 IST
எழுத்தின் அளவு:
Rajini's-Jailer-Glimpse-Video-Ready

விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் சிவ ராஜ்குமார், ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அடுத்த மாதம் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அப்படத்தின் கிளிப்ம்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளார் நெல்சன். இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் ஒரு டெஸ்ட் சூட் நடத்தியுள்ளார். இதில் ரஜினி மற்றும் ஜெயிலர் படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களும் கலந்து கொண்டு நடித்துள்ளார்கள். ஆகஸ்டு மாதத்திற்கு முன்பே இந்த கிளிப்ம்ஸ் வீடியோவை வெளியிட இயக்குனர் நெல்சன் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ஹீரோவாகும் பாண்டியராஜன்!மீண்டும் ஹீரோவாகும் பாண்டியராஜன்! வெளியானது ஜெய்யின் எண்ணித்துணிக டிரைலர் வெளியானது ஜெய்யின் எண்ணித்துணிக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)