ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‛வாடிவாசல்' படத்தை தாணு தயாரித்து வருகிறார். ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் ஒத்திகை படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சூர்யா காளை மாடுகளுடன் சிறப்பு பயிற்சியும் எடுத்து வந்தார். தமிழகத்தில் இருந்து மதுரை, திருநெல்வேலி, காங்கேயம் போன்ற பகுதிகளில் இருந்து காளை மாடுகளும் வரவைக்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. தற்போது இப்படத்திற்கு சூர்யா இடைவெளிவிட்டு பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று(ஜூலை 23) சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் படத்தில் இருந்து ஸ்பெஷல் வீடியோ காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்திற்காக சூர்யா தன்னை தயார் படுத்திக்கொள்ள, மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்ட காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
வாடிவாசல் வீடியோ : https://www.youtube.com/watch?v=5rKwUho_hUQ