ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படம் லார்ட் ஆப் ரிங்ஸ். இந்த படம் 3 பாகங்களாக வெளிவந்தது. தற்போது இதன் அடுத்த பாகம் தி ரிங்ஸ் ஆப் பவர் என்ற பெயரில் வெப் தொடராக தயாராகி வருகிறது. வரும் செப்டம்பர் 2ம் தேதி ஓடிடியில் உலகளவில் வெளியிடப்படவுள்ளது.
8 பாகங்கள் கொண்ட இத்தொடரில் கலாட்ரியல் (மார்ஃபிட் கிளார்க்), எல்ரோன்ட் (ராபர்ட் அராமயோ), ஹை கிங் கில்-கலாட் (பெஞ்சமின் வாக்கர்), தி ஹார்ஃபூட்ஸ் மேரிகோல்ட் பிராண்டிஃபுட் (சாரா ஸ்வாங்கோபானி), எலனோர் 'நோரி' பிராண்டிஃபுட் (மார்கெல்லா கவெனாக்), பாப்பி பிரவுட்பிலோ ஃபெலோ (மேகன் ரிச்சர்ட்ஸ்) மற்றும் சாடோக் பர்ரோஸ் (சர் லென்னி ஹென்றி), தி ஸ்ட்ரேஞ்சர் (டேனியல் வெய்மன்), ஆகியோர் நடித்துள்ளனர். ஜே.டி.பயன், பேட்ரிக் மெக்கே ஆகியோர் இயக்கி உள்ளனர்.
பிரமாண்டமாக உருவாகி வெளியாகி உள்ள இதன் டீசர் வைரலாக பரவி வருகிறது. இந்த உலகம் தோன்றிய காலத்தில் சூரியன் இல்லை. ஆனால் வெளிச்சம் இருந்தது. அந்த வெளிச்சத்தை நீக்கி இருண்ட உலகமாக்க தீய சக்திகள் முயற்சிக்கிறது. அதை கதையின் நாயகர்கள் எப்படி தடுத்து நிறுத்துகிறார்கள் என்கிற ஒன்லைன்தான் கதை.