ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
மிதுனா எண்டர்டெயின்மெண்ட்ஸ், சயின்ஸ் ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ள படம் ஆகாச வாணி சென்னை நிலையம். இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடா, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. சதீஷ் பத்துலா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். சிவக்குமார், உம்மைசந்தர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். அக்ஷதா ஸ்ரீதர், அர்ச்சனா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் மாதவி லதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆரிப் ஒளிப்பதிவு செய்கிறார், கார்த்திக் கொடக்கண்ட்லா இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் சதீஷ் பத்துலா கூறியதாவது: ஆகாசவாணி சென்னை நிலையம் ஒரு எண்டர்டெயின்மென்ட் மற்றும் திரில்லிங் கலந்த வித்தியாசமான லவ் ஸ்டோரி. சிறப்பான நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் எனக்கு கிடைத்ததால் தான் இந்த படத்தை பான் இந்தியா படமாக உருவாக்க முடிந்தது. இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த இந்த வரவேற்பை பெரும் படம் விரைவில் 5 மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது என்றார்.