மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |
"விஸ்வரூபம் படம் வெளியாக, மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என, தமிழக முஸ்லிம் சிந்தனையாளர்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து, பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் அமீது வெளியிட்டுள்ள அறிக்கை: குரானையும், முஸ்லிம்களையும் இழிவுபடுத்தும் வகையில், விஸ்வரூபம் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இத்தடையை, நீக்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதன்பின்பும், அப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என, மேல்முறையீடு செய்து தடை பெற்றதுள்ளது, சந்தேகங்களை எழுப்புகிறது. நபிகளுக்கும், அவரை ஏற்க மறுத்துவர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில், சமூக நல்லிணக்கத்தையும், சகிப்புத் தன்மையையும், கருத்து சுதந்திரத்தையும் ஏற்றுக்கொள்ளும் வகையில், வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. சட்டம்,ஒழுங்கைக் காரணம் காட்டி, விஸ்வரூபம் படம் வெளியாக தடை விதிப்பதை, பெருவாரியான முஸ்லிம்கள் ஏற்கவில்லை. எனவே, சமூக நல்லிணக்கத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையிலும், விஸ்வரூபம் படம் தடையின்றி வெளியாக, மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும். இவ்வாறு, அப்துல் அமீது கூறியுள்ளார்.