நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய் டிவிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' தொடர் மூலமாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கிருவர் தொடர்களில் நடித்தார். தற்போது 'இது சொல்ல மறந்த கதை' சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கும் சின்னத்திரை நடிகர் தினேஷூக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் தற்போது இருவரும் பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தினேஷ் கூறியிருப்பதாவது: எல்லோர் வீட்டிலும் கணவன், மனைவிக்குள்ளாக சண்டை இருப்பது போன்றுதான் எங்களுக்குள்ளும் சின்ன சண்டை இருக்கிறது. சிலர் சீக்கிரம் புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்து விடுவார்கள். சிலருக்கு அது நேரம் எடுக்கும். எங்களுக்குள்ளும் அது போலத்தான். சிறிது காலம் பிரிந்து இருக்கிறோம். ஆனால், இப்போது வரை நானோ, ரச்சிதாவோ சட்டரீதியாக பிரியலாம் என்று நினைத்து எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்பது மட்டும் உறுதி.
விரைவில் காலம் எல்லாவற்றையும் சரி செய்யும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். ரச்சிதா என்னை விட தைரியசாலி. தவறாக பரவும் வதந்திகளை கண்டு கொள்ள மாட்டார். நானும் அதை புறந்தள்ளி விடுவேன். இப்போதைக்கு இருவரும் அவரவர் வேலையில் கவனமாக இருக்கிறோம். விரைவில் நல்லது நடக்கும் என நம்புகிறேன். என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இருவரும் பிரிந்து வாழ்வது உறுதியாகி இருக்கிறது. ரச்சிதா தரப்பில் விவாகரத்துக்கான சட்டரீதியான ஏற்பாடுகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.