உப்பு சப்பில்லாத வேடத்தில்நடிக்க விருப்பமில்லை
"பூ படத்தில், கிராமத்து பெண் கேரக்டரில் வாழ்ந்து காட்டியிருந்த பார்வதிக்கு, அதற்கு பின், தமிழிலும் சரி, மலையாளத்திலும் சரி, சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் வெளியாகவில்லை. கடந்தாண்டு, அவர் நடித்த, ஒரு படம் கூட வெளியாகவில்லை.அவர், திரையுலகிற்கு வந்து, ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. இதுவரை, 12 படங்களில் தான் நடித்துள்ளார். தற்போது, தனுஷ் ஜோடியாக, "மரியான் என்ற படத்திலும் மற்றும் ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார்." <உங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காதது ஏன் என, அவரிடம் கேட்டபோது," வாய்ப்புகள் அதிகம் வருகின்றன. ஆனால், உப்பு, சப்பில்லாத கேரக்டர்கள் தான், கிடைக்கின்றன. அதில் நடிப்பதை விட, வீட்டில் சும்மாயிருந்து, வேறு ஏதாவது ஒரு உருப்படியான வேலையை பார்க்கலாமே என்கிறார். மேலும், "எனக்கு பொருத்தமான, கேரக்டர் கிடைத்தால் மட்டுமே, நடிக்க ஒப்புக் கொள்கிறேன். படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக, வாய்ப்புக்காக முட்டி மோதும், பழக்கம் எதுவும் என்னிடம் இல்லை என, கறாராக கூறுகிறார், பார்வதி.