ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
நடிகர் தனுஷ், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினி ஆகிய இருவரும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகளுக்கு பிறகு தாங்கள் பிரிந்து வாழப் போவதாக அறிவித்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளார்கள். பிரிந்து வாழப் போவதாக அறிவித்தபோதும் மகன்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களை இணைந்து வாழச் சொல்லி குடும்பத்தினர் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ஐஸ்வர்யா, ‛பயணி' என்ற வீடியோ ஆல்பத்தை இயக்கியவர் அடுத்து தமிழ் மற்றும் ஹிந்தியில் படம் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் நடித்துள்ள தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் பிரிமியர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது மகன்கள் இருவரையும் அமெரிக்கா அழைத்துச் சென்றிருந்தார் தனுஷ். அங்கு அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியானது.
இந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பி உள்ளார்கள். அதையடுத்து மகன்கள் இருவரையும் கட்டித்தழுவி வரவேற்றுள்ளார் ஐஸ்வர்யா. அதோடு, ‛‛சில நேரங்களில் உங்களுக்கு தேவையானது அவர்களின் அணைப்பு மட்டுமே'' என பதிவிட்டுள்ளார்.