மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
ராஜ்யசபா எம்.பி.,யாக பொறுப்பேற்கவுள்ள இளையராஜாவுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 1400 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. சமீபத்தில் இவர் நியமன எம்பி.,யாக அறிவிக்கப்பட்டார். இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இளையராஜா அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டு கச்சேரி நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று(ஜூலை 19) காலை சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவரை வரவேற்க பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன் , வானதி சீனிவாசன், சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பா.ஜ., மாவட்ட செயலாளர்கள், இயக்குநர்கள் பாரதிராஜா, கங்கை அமரன், மற்றும் இசை சங்கத்தினர் திரளாக வந்திருந்னர்.
இளையராஜாவுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டது. எம்.பி., பதவி மற்றும் பிரதமர் மோடி குறித்த அவரின் பாராட்டு ஆகியவை சர்ச்சைக்குள்ளானது. இதனால் பாதுகாப்பு கூடுதலாக வழங்க போலீசார் முடிவு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.