நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'கார்கி' படம் ரசிகர்களின் பாராட்டுக்களையும், நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இப்படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது. அதன் பிறகுதான் படம் மீதான பார்வை ரசிகர்களிடம் ஏற்பட்டது. படம் வெளியான பின் இரு தினங்களுக்கு முன்பு சூர்யா இந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்து படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்திருந்தார். “நீண்ட காலத்திற்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ளக் கூடிய சிறப்பாக எழுதப்பட்ட, சிறப்பாக உருவாக்கப்பட்ட படம். நலம் விரும்பிகள், ரசிகர்கள், மீடியா என அனைவரிடமும் அன்பையும் மரியாதையையும் படக்குழு பெற்றுவிட்டது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு இன்று நன்றி தெரிவித்துள்ள சாய் பல்லவி, “அனைத்திற்கும் நன்றி சார். உங்கள் உதவியால் தான் கார்கி பெரிய அளவில் ரசிகர்களிடம் சென்று சேர்ந்தது. இதற்காக ஜோதிகா மேடத்திற்கும் நன்றி சொல்லுங்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.