ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ரன், சண்டக்கோழி, பையா என தமிழ் சினிமாவுக்கு ஸ்டைலிஷான ஆக்சன் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. ஒரு கட்டத்தில் அவரது டைரக்சனில் நடிக்க ஆர்வமாக காத்திருந்த முன்னணி ஹீரோக்கள் அப்படியே பின்வாங்கி விட்டனர். சில வருட இடைவெளிக்கு பிறகு தெலுங்கு இளம் ஹீரோவை வைத்து தி வாரியர் என்கிற படத்தை இருமொழிப்படமாக இயக்கியுள்ளார் லிங்குசாமி.. கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
குறிப்பாக லிங்குசாமி தனது முந்தைய படங்களின் தாக்கத்தில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்றும் அவரது படங்களில் இருந்தே பல காட்சிகளை இந்தப்படத்தில் மீண்டும் இடம்பெற வைத்துள்ளார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்தநிலையில் இந்தப்படத்தின் கதையை ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோரிடம் லிங்குசாமி சொன்னதாகவும் ஆனால் அவர்கள் இருவரும் சில காரணங்களால் இதில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.