நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்த பிறகு தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. இந்த நிலையில் சமீபத்தில் தான் மூன்று கண்டங்கள் மற்றும் நான்கு நகரங்களுக்கு சுற்றுலா செல்ல இருப்பதாக ஒரு பதிவு போட்டிருந்தார். முதல் கட்டமாக பாங்காங்கில் இருந்து தனது பயணத்தை தொடங்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் பூஜா ஹெக்டே. அதை வெளிப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் முன்பு நின்று தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.