நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக விலகி இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு அவரது முன்னாள் கணவரான நாக சைதன்யா மற்றும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்கும் நடிகை ஷோபிதா துலிபல்லா இடையில் காதல் என ஒரு வதந்தி பரபரப்பாகப் பரவியது. அது குறித்து சிலர் வேண்டுமென்றே சமந்தாவின் பெயரையும் குறிப்பிட்டு வந்தனர். அதனால்தான் சமந்தா மனமுடைந்து இப்படி சமூக வலைத்தளங்களை விட்டு விலகியிருக்கலாம் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர் சமந்தா. அடிக்கடி சுவாரசியமாக ஏதாவது ஒரு பதிவிட்டு வருவார். தற்போது பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பற்றி பரபரப்பாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்நிகழ்ச்சியில் சமந்தா தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி சில விஷயங்களைப் பேசியுள்ளார் என்றும் தெரிகிறது. விரைவில் ஓடிடியில் வர உள்ள அந்த நிகழ்ச்சிக்காகக் கூட அவர் விலகியிருக்கலாம் என்கிறார்கள்.