நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஆமீர்கான், நாக சைதன்யா மற்றும் பலர் நடிக்கும் ஹிந்திப் படமான 'லால் சிங் சத்தா' படத்தின் சிறப்புக் காட்சி ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவி வீட்டில் சில தினங்களுக்கு முன்பு நடந்துள்ளது. அந்த சிறப்புக் காட்சியில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, இயக்குனர் ராஜமவுலி, நாக சைதன்யா, இயக்குனர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு படத்தைப் பார்த்து ரசித்தனர்.
சிரஞ்சீவி வீட்டிற்கு வந்த ஆமீர்கான், அவர்கள் படம் பார்த்து ரசித்தது, படம் முடிந்த பின் விவாதித்தது உள்ளிட்ட வீடியோவை சிரஞ்சீவி அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், தன்னுடைய வீட்டில் படத்தின் சிறப்புக் காட்சியை நடத்தியதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்தப் படம் வின்சன் குரூம் எழுதிய 'பாரஸ்ட் கம்ப்' நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம். ஆமீர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா, மோனா சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 11ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகிறது.