நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில், தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வாரிசு'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்தக் கட்டப் படப்பிடிப்புடன் பெரும்பான்மையான படம் முடிந்துவிடும் என்று தகவல்.
இதனிடையே, படத்தின் சில வியாபாரங்களை இப்போதே ஆரம்பித்துவிட்டார்களாம். படத்தில் பெரிய நட்சத்திரக் கூட்டமே நடிப்பதால் படத்தின் ஓடிடி, தியேட்டர் உரிமைகளை வாங்க கடும் போட்டி நிலவி வருகிறதாம். ஓடிடி உரிமைக்குத்தான் பல நிறுவனங்கள் போட்டி போட்டதாகத் தகவல். முடிவில் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் 100 கோடி கொடுத்து வாங்கியதாகவும், சாட்டிலைட் உரிமையை பிரபல டிவி 65 கோடி கொடுத்து வாங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு உரிமைகளும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய நான்கு மொழிகளுக்குமானதாம். ஹிந்தி உரிமை 30, 40 கோடி வரை போகலாம் என்கிறார்கள்.
படத்தில் விஜய் சம்பளம் மட்டும் 120 கோடி, இதர சம்பளம் தயாரிப்புச் செலவு என 80 கோடி என்றாலும் ஓடிடி, சாட்டிலைட் உரிமைகளிலேயே அந்த முதலீடு திரும்பக் கிடைத்துவிடும் வாய்ப்புள்ளது. தியேட்டர் வியாபாரம் உள்ளிட்டவை தனி. அது பற்றிய விவரங்கள் விரைவில் வெளிவரலாம்.