நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பூ, பிச்சைக்காரன், டிஷ்யூம், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களை இயக்கிவர் சசி. தற்போது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'நூறு கோடி வானவில்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் சித்தி இட்னானி கதாநாயகியாக நடிக்கிறார். கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத் உள்பட நடித்துள்ளனர். பாலாஜி காப்பா, அருண் அருணாச்சலம் தயாரிக்கும் இப்படத்துக்கு சித்து குமார் இசையமைக்கிறார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. தற்போது படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கிறது. படம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது. இது ஓடிடி தளத்திற்கென்று தயாராகும் படம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு முன்னணி இயக்குனரின் படம் தியேட்டருக்கு வராமல் ஓடிடி தளத்திற்கு செல்வது தியேட்டர் அதிபர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.