நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான நிகழ்ச்சி பிக்பாஸ். இங்கு ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் கமல்ஹாசனும், மலையாளத்தில் மோகன்லாலும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
ஹிந்தியில் 15 சீசன் இதுவரை முடிந்துள்ளது. சல்மான்கான் தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் 16வது சீசனை தொகுத்து வழங்க சல்மான்கான் ஆயிரம் கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் பலமுறை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து வெளியேற விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுவரை 350 கோடி சம்பளமாக பெற்று வந்த சல்மான்கான், திடீரென ஆயிரம் கோடியாக உயர்த்தி இருப்பது நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்ளத்தான் என்கிறார்கள்.