Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

தமிழகத்தை விட்டு என்னை வெளியேற்ற பார்க்கிறார்கள்...! கமல் உருக்கம்!!

I will lost my house if movie not release says kamal விஸ்வரூபம் பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இப்படத்‌திற்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் நேற்று நீக்கியது. இருந்தும் இதை எதிர்த்து தமிழக அரசு இன்று மேல்முறையீடு மனு செய்துள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள தனது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் கமல்ஹாசன். பேசும்போதே ரொம்ப உருக்கமாக பேச ஆரம்பித்தார். அவர் பேசுகையில், என்னுடைய படம் நடக்கும் களம் ஆப்கானிஸ்தான். இது இந்திய-முஸ்லிம்களை எப்படி கேலி செய்ய முடியும். இந்த படத்தை எடுப்பதற்காக பெரும் செலவு செய்திருக்கிறேன். என்னுடைய திரையுலகை அனுபவத்தையும், எனக்கு இருக்கும் தொழில்நுட்ப அறிவையும் கொண்டு இந்த படத்தை எடுத்துள்ளேன். இந்தபடத்துக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் ஒரு நபரிடம் அடகு வைத்துள்ளேன்.

ரிலீசாகவில்லை என்றால் வீடு எனதல்ல: ஒருவேளை படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் எனது சொத்துக்கள் அனைத்தும் அவருக்கு சென்றுவிடும். படம் சொன்னபடி ரிலீஸ் ஆகவில்லை என்றால் இப்போது நான் உங்களுக்கு பேட்டி அளித்து கொண்டு இருக்கும் இந்த வீடு ‌எனக்கில்லை. இதுவே நான் இங்கும் அளிக்கும் கடைசி பேட்டி கூட இதுவோ என்று தோன்றுகிறது. கோர்ட்டில் விஸ்வரூபம் வழக்கு நடந்தபோது நீதிபதி கேட்டார் ஒருவரின் முதலீடுக்காக நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டுமா என்று...? தேவையில்லை. நான் இப்போதும் சொல்கிறேன் நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம். ஒருவேளை எனது படத்தை தடை தான் செய்ய வேண்டும் என்றால் கடைசியாக நாட்டுக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் இழக்க தயாராக இருக்கிறேன்.

இதன்மூலம் என்னை வீழ்த்திவிட்டதாக நினைக்கலாம், ஆனால் விதையாகி மரமாவேன். தனி மரம் தான் ‌தானே என்று எண்ணிவிடாதீர்கள். பல சுதந்திர பறவைகள் வந்து தங்கும் இடமாக நான் இருப்பேன். அப்போது விதைகள் இன்னும் அதிகமாகி மரமாகும். மரங்கள் தோப்பாகும், தோப்பு காடாகும். இதற்கு காரணம் நான். விதை என்‌னுடையது. என்னுடைய படத்தின் வசனமே எனக்கு உதவுகிறது.

தமிழகத்தை விட்டு வெளியேற்ற பார்க்கிறார்கள் : எனக்கு மதம் கிடையாது, அரசியல் கிடையாது, மனிதநேயம் மட்டுமே விரும்புவேன். மனதில் பட்டதை தைரியமாக எடுத்து சொல்பவன். இந்தப்படம் நிச்சயம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் கிடையாது. எதற்காக எனது படத்தை தடை செய்கிறார்கள் என்று புரியவி‌ல்லை, இருந்தும் நீதியை நம்புகிறேன். ஒருவேளை தமிழகம் மதச்சார்ப்பற்ற மாநிலமாக இல்லாமல் போய்விட்டால் நிச்சயம் வேறு ஒரு மாநிலத்தை தேடி போவேன் அதற்காக தமிழகத்தை விட்டு வெளியேறவும் நான் தயார். தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சூழல் காரணமாக, நான் தமிழகத்தை விட்டு வெளியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளேன் ‌என்று உருக்கமாக பேட்டியளி்த்தார்.

Tags »
kamal, கமல்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (86)

anbarasu - dharmapuri,இந்தியா
2013-02-06 06:07:33 Report Abuse
 anbarasu ஆல் இஸ் well
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ahmed - khobar,சவுதி அரேபியா
2013-02-04 02:03:28 Report Abuse
 ahmed இந்த படம் வெளிவர வேண்டும் என்றால் அதில் உள்ள சர்ச்சைக்குரிய கட்சிகளை எடுத்துவிட்டு வெளியிடுங்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
வெங்கட்ராமன்.s - madurai,இந்தியா
2013-02-03 12:49:23 Report Abuse
 வெங்கட்ராமன்.s நல்லதே நடக்கும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கே.nazar - Jeddah,சவுதி அரேபியா
2013-02-01 09:33:59 Report Abuse
 கே.nazar முஸ்லிம் ஆப்கானிஸ்தானிலும் மட்டுமில்லை உலஹம் முழுவதும் இருக்கிறார்கள். நல்ல இன்டியான கமல் இருக்கணும். ஒரு சமுதாயம் பதிக்கும்போது கமல் பிச்சை எடுப்பதில் தப்பில்லை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
செந்தில் kumar - kovilpatti,இந்தியா
2013-02-01 05:03:43 Report Abuse
 செந்தில் kumar கமல் சார் உங்களுக்கு எங்க எல்லோரோட சப்போர்ட்டும் கண்டிப்பா உண்டு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 81 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 

தொடர்புடைய வீடியோ

Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in