நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

2003ம் ஆண்டு வெளியான விஷ்ணு தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் நீத்து சந்திரா. யாவரும் நலம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு ஜெயம் ரவியின் ஆதி பகவன், வைகை எக்ஸ்பிரஸ், தீராத விளையாட்டு பிள்ளை, சேட்டை, திலகர் படங்களில் நடித்தார். ஒரு பாடலுக்கு ஆடினார். பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்தார். தற்போது சினிமா வாய்ப்புகள் இன்றி இருக்கும் அவரை தொழில் அதிபர் ஒருவர் வாடகை மனைவியாக இருக்க அழைத்து மாதம் 25 லட்சம் ரூபாய் சம்பளமும் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து நீத்து சந்திரா அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒரு வெற்றிகரமான நடிகையின் தோல்விக் கதை தான் என் கதை. பெரிய படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இன்று வேலை இல்லாமல் இருக்கிறேன். மாதம் ரூ. 25 லட்சம் தருகிறேன், என் மனைவியாக இருக்கிறீர்களா என பெரிய தொழில் அதிபர் ஒருவர் என்னிடம் கேட்டார். அந்த அளவிற்கு என் நிலை மாறி இருக்கிறது. நிறைய படங்களில் நடித்தும் நான் தேவையில்லாதவள் போன்று உணர்கிறேன்.
இவ்வாறு நீது சந்திரா உருக்கமாக கூறியுள்ளார்.