நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகள் காதலித்து கடந்த மாதம் 9ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். ரஜினி, ஷாருக்கான், மலையாள நடிகர்கள் திலீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறைவானவர்கள் கலந்து கொண்டாலும் ரிச்சாக நடந்த இந்த திருமணத்தை ஓடிடியில் ஒளிபரப்ப முன்னணி ஓடிடி நிறுவனம் 25 கோடி கொடுத்து உரிமம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களின் திருமண வீடியோவை ஓ.டி.டி. தளம் வெளியிட மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதோடு தாலிகட்டும் படத்தை தவிர வேறு படமோ கிளிப்பிங்ஸோ மீடியாக்களுக்கு தரக்கூடாது என்று ஓடிடி நிறுவனம் தடை விதித்திருந்ததாம். ஆனால் அதை மீறி திருமணமான 30வது நாளை கொண்டாடும் வகையில் விக்னேஷ் சிவன் திருமணத்தில் ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட சில படங்களை வெளியிட்டார். இது ஓடிடி தளத்திற்கு பிடிக்கவில்லையாம். இதனால் நயன்தாரா திருமணத்தை ஒளிபரப்புவதில் இருந்து ஓடிடி நிறுவனம் பின்வாங்குவதாக தெரிகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.