ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
கல்கி எழுதிய வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் அதே பெயரில் படமாகிறது. மணிரத்னம் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்பட பலர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளிவருகிறது. இதன் புரமோசன் பணிகள் தற்போது தொடங்கி உள்ளது.
இந்த படத்தில் கமல்ஹாசனும் இணைந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. படத்தின் கதையை குரல் வழியாக (வாய்ஸ் ஓவர்) கமல் நடத்திச் செல்கிறார். முன் கதை சுருக்கத்தை சொல்லி கதையை தொடங்கும் அவர், ஒவ்வொரு முக்கிய கேரக்டர் அறிமுகமாகும்போதும் அந்த கேரக்டரையும் தன் குரலால் அறிமுகப்படுத்துகிறார். படம் வெளியாகும் 5 மொழிகளிலும் கமல்ஹாசனே இதற்கு குரல் கொடுத்திருக்கிறார். இது பற்றிய அதிகாரபூர்வ தகவலை படத்தயாரிப்பு தரப்பு வெளியிடவில்லை.