நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹார்மனி அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுசூழல் பாதுகாப்புக்காக சேவையாற்றி வருகிறவர்களுக்கு அன்னை தெரசா விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாலிவுட் நடிகையும், ஐ.நா.வின் சுற்றுச்சூழல் தூதுவருமான தியா மிர்சா மற்றும் சுற்றுச்சூழல்வியலாளர் அப்ரோஸ் ஷா ஆகியோருக்கு அன்னை தெரசா விருது அறிவிக்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழா நடந்தது, மகாராஷ்டிரா மாநில கவர்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த விருதை தியா மிர்சாவுக்கு வழங்கினார். தியா மிர்சா பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் வெளிவந்த என் சுவாசக் காற்றே படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இதற்காக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.