மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
முன்பெல்லாம் விக்ரமின் நடிப்பை அவருடன் நடித்தவர்கள் புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால் இப்போது தன்னுடன் நடித்த நடிகைகளின் நடிப்பைப்பற்றி பக்கம் பக்கமாய் புகழ்ந்து தள்ளுவதை வாடிக்கையாகக்கொண்டிருக்கிறார் விக்ரம். அந்த வகையில் ராஜபாட்டை படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த தீக்ஷாசேத்தை புகழத் தொடங்கியவர் அதன்பிறகு, அமலாபால், அனுஷ்கா என்று ஆரம்பித்து இப்போது டேவிட் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்துள்ள இஷாஷெர்வானியிடம் போய் நிற்கிறார்.
இந்த டேவிட் படத்தில் என்னுடன் அவர் நடித்த நடிப்பைப்பார்த்து அசந்து விட்டேன். இதற்கு முன்பு எனக்கு ஜோடியாக எத்தனையோ நடிகைகள் நடித்திருககிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம் இந்த அளவுக்குத்தான் நடிப்பார்கள் என்பதை என்னால் முன்பே கணிக்க முடிந்தது.ஆனால் இந்த இஷாவோ நான் நினைக்காததையும் செய்து காட்டினார். அப்படியொரு அசாத்தியமான நடிகை அவர் என்று இஷா புகழ்மடல் வாசிக்கும் விக்ரம், ஐ படப்பிடிப்பில்கூட இஷாவைப்பற்றி சதா பேசிக்கொண்டேயிருப்பதால், அப்படத்தின் நாயகியான எமிஜாக்சன் விக்ரமிடம் கடலை போடுவதைகூட தவிர்த்து விட்டாராம்.