அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை |
விஜய் ஆண்டனி நடிப்பில் புதிதாக உருவாகி வரும் க்ரைம் திரில்லர் மூவி ‛கொலை'. இந்த படத்தில் சின்னத்திரையின் மூடிசூடா ராணியாக வலம் வந்த ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தான் ராதிகா தனது புதிய சீரியலான 'பொன்னி கேர் ஆஃப் வாணி ராணி' என்ற தொடரை துவங்கியுள்ளார். இந்நிலையில், கொலை படத்தில் அவரது போஸ்டர் லுக்கை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அதில், பழைய படங்களில் வரும் வில்லிகளை போல கோட் ஷூட் கெட்டப்பில் கையில் சிகரெட்டுடன் அமர்ந்திருக்கும் ராதிகாவின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதனை வெளியிட்டுள்ள படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி, கேப்ஷனில் 'ரேகா- தி பாஸ்' என ராதிகாவின் கதாபாத்திரம் பற்றிய குறிப்பை வெளியிட்டுள்ளார். ராதிகாவின் இந்த மாஸான போஸ்டர் லுக் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.