சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! | குஷ்பூவின் சமூக அக்கறை! | லட்சுமிராயை துரத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள்! | சோனியா அகர்வாலின் சைடு பிஸ்னஸ்! | சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! |
பாலிவுட் இயக்குனர், சுபாஷ் காய், வெள்ளித் திரைக்கு, புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதில், பிரபலமானவர். இவர் அறிமுகப்படுத்திய, மனிஷா கொய்ராலா, மஹிமா சவுத்ரி போன்றவர்கள், பாலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டியவர்கள். இதனால், இவர், ஒரு படம் எடுத்தாலே, அதில் நடிக்கும் நட்சத்திரங்கள் யார் என,தெரிந்து கொள்வதில், பாலிவுட்டே
பரபரக்கும். சுபாஷ் காய், தற்போது,"கான்சி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிப்பதற்கு, பொருத்தமான நடிகையை தேடி வந்தார். கடும் போராட்டத்துக்கு பின், கோல்கட்டாவை சேர்ந்த ஒரு ரசகுல்லாவை, அவர் தேர்வு செய்துள்ளார். அந்த ரசகுல்லாவின் பெயர், மிஸ்தி. இவரின் புகைப்படம், சமீபத்தில் மீடியாக்களில் வெளியாகியது.
இதுகுறித்து, சுபாஷ் காய் கூறுகையில், " இந்த படத்தில் நடிப்பதற்கு, 350 பெண்களுக்கு மேக்அப் போட்டு, டெஸ்ட் எடுத்தேன்.
யாருமே, திருப்தியாக இல்லை. இறுதியாக, இந்த பெண்ணை தேர்வு செய்தேன். இந்த பெண்ணின் முகம், எனக்கு மிகவும்
திருப்தியாக இருந்தது என்றார்.