நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழில், இது என்ன மாயம் படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அதையடுத்து ரஜினி முருகன், ரெமோ, சீம ராஜா, தொடரி, அண்ணாத்த, சாணிக் காயுதம் பல படங்களில் நடித்தார். அதோடு சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான மகாநடி என்ற படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தற்போது உதயநிதியுடன் மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து தான் நடித்த ரெமோ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பாடி இருக்கிறார். அந்த வீடியோவையும் அவர் தற்போது இணையதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் பின்னணி பாடகிகளைப் போன்றே கீர்த்தி சுரேஷ் அழகாக பாடி இருப்பதால் அதற்கு ரசிகர்கள் லைக் கொடுத்து அவரை வாழ்த்தி வருகிறார்கள்.