500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
செய்தி வாசிப்பாளாராக கேரியரை தொடங்கியவர் அனிதா சம்பத். அப்போதே சில படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்து வந்தார். நடிப்பின் மீது ஆசை கொண்ட அனிதா சம்பத் அதற்காக பல முயற்சிகள் எடுத்து வந்தார். இந்நிலையில் தான் அவருக்கு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சான்ஸ் கிடைத்தது. அதை பயன்படுத்திக்கொண்ட அனிதா சம்பத் தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் இன்று பிரபலமாகியிருக்கிறார். தற்போது 'தெய்வ மச்சான்' படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்து வருகிறார். இந்நிலையில், அனிதா சம்பத் சமீபத்தில் நடத்தியுள்ள போட்டோஷூட்டில் பார்ப்பதற்கே வித்தியாசமாக ஆளே மாறிப்போயிருக்கிறார். அதன் மேக்கிங் வீடியோவை தனது வெளியிட ரசிகர்கள் அனைவரும் 'நம்ம அனிதாவா?' என ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.