ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்க தெலுங்கில் உருவாகி ஐந்து மொழிகளில் வெளியான பிரம்மாண்டமான படம் 'ராதேஷ்யாம்'. சுமார் 300 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் எந்த மொழிகளிலும் வெற்றி பெறாமல் பெரும் தோல்வியைத் தழுவியது. 150 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து 150 கோடி வரையில் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இப்படத்தைக் கடந்த வாரம் தெலுங்கில் டிவியில் முதல் முறை ஒளிபரப்பு செய்தார்கள். தியேட்டர்களுக்கு மக்கள் வராமல் ஏமாற்றியதைப் போல டிவியிலும் படத்தைப் பார்க்க மக்கள் விரும்பவில்லை போலிருக்கிறது. வெறும் 8.25 டிவி ரேட்டிங்கை மட்டுமே இந்தப் படம் பெற்றது. டிவியில் கூட இந்தப் படத்திற்கு வரவேற்பு இல்லை என்பது பிரபாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
தெலுங்கில் இரண்டாம், மூன்றாம் நிலை நடிகர்களின் படங்கள் கூட முதல் முறை ஒளிபரப்பில் இதை விட அதிகமான ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. தெலுங்கில் இதுவரை டிவியில் ஒளிபரப்பான படங்களில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடித்த 'அலா வைகுந்தபுரம்லோ' படம் 29.4 டிவி ரேட்டிங்குடன் முதலிடத்தில் உள்ளது.