ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
மெட்ராஸ் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஹரி கிருஷ்ணன் . அதன் பிறகும் பல படங்களில் நடித்த அவர் தற்போது பெயரிடப்படாத படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக டூலெட், மண்டேலா படங்களில் நடித்த ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார். மஞ்சள் சினிமா சார்பில் கோல்டன் சுரேஷ், விஜயலட்சுமி தயாரிக்கிறார்கள், அறிமுக இயக்குனர் ஜஸ்டின் பிரபு இயக்குகிறார். ஏ.குமரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
"பெயரிடப்படாத இப்படம் நடுத்தரக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையைச் சுற்றியுள்ள யதார்த்தமான கதையைக் கொண்டிருக்கிறது. இது நிச்சயமாக ஒரு தனித்துவமான ஒன்றாக இருக்கும். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறவுள்ள து" என்கிறார் ஜஸ்டின் பிரபு.