ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை பத்மப்பிரியா அமெரிக்காவில் எம்பிஏ படிக்கிறார். நடிகை பத்மப்பிரியா முற்போக்கு சிந்தனையுள்ள நடிகை. வேலூரை பூர்வீகமாக கொண்ட நடிகை. ஆனாலும் நாகர்கோவில் பக்கம் வளர்ந்ததால் மலையாள நடிகையானார். இதுவரை 40 படங்களுக்குமேல் நடித்துள்ள அவர் நிறைய படிப்பவர். தான் நடிக்கும் படங்களில் துணை இயக்குனர் போன்று பணியாற்றுகிறவர். நடிப்புக்காக தன்னை வருத்திக் கொள்பவர். "மிருகம்" படத்திற்காக தென்னை மரத்தின் மீதெல்லாம் ஏறினார். "பழசிராஜா" படத்துக்காக களறி சண்டை போட்டார். சினிமாவை மட்டும் நம்பியிராமல் எதையாவது செய்து கொண்டே இருப்பவர்.
தற்போது பத்மப்பிரியா அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து வருகிறார். ஏற்கெனவே பிபிஏ படித்துள்ள இவர் இப்போது எம்பிஏ படிக்கிறார். "சினிமாவையே எப்போதும் நம்பிக் கொண்டிருக்க முடியுமா? சினிமா கைவிடும்போது கவுரவமான ஒரு வேலை பார்க்க படிப்பு முக்கியம் அதுதான் படிக்கிறேன்" என்கிறார் பத்மப்பிரியா.