நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சுப்பிரமணியபுரம் படத்தில் சசிகுமாரின் நண்பனாக நடித்து புகழ்பெற்றவர் சவுந்தர்ராஜா. அதன் பிறகு பல படங்களில் ஹீரோவுக்கு நண்பர், வில்லன் கேரக்டர்களில் நடித்து வந்தார் 'ஒரு கனவு போல', 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' படங்களில் ஹீரோவாக நடித்த சவுந்தர்ராஜா சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது ‛சாயாவனம்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
இதனை மலையாள இயக்குனர் அனில் இயக்குகிறார். இந்தப் படத்தை தாமோர் சினிமா சார்பில் சந்தோஷ் தாமோதரன் தயாரிக்கிறார். தேவானந்தா, அப்புக்குட்டி, கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எல் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பொலி வர்கீஸ் இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் அனில் கூறியதாவது: சாயாவனம் என்றால் அடர்ந்த காடு என்று பொருள்படும், படத்தில் வரும் கதாபாத்திரங்களின் குணத்தை இது குறிக்கும். படத்தின் பெரும்பகுதி சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டது. முழுக்க முழுக்க மூடுபனி, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது என்று நான் நம்புகிறேன். படத்தில் வரும் கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக இயற்கை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்கள் காடுகளைப் போல அடர்த்தி மிக்கவை, அவர்களிடம் பல ரகசியங்கள் உள்ளன. என்கிறார் அனில்.