நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். திலீபின் முன்னாள் மனைவியான இவர் திலீப்பை விவாகரத்து செய்துவிட்டு தனது இரண்டாவது ரவுண்டில் ஏராளமான படங்களில் நடித்து சாதனை படைத்து வருகிறார். மஞ்சு வாரியர் நேர்மையாக வரி செலுத்துபவர் என்று மத்திய அரசு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியும், நேர்மையாக வரி செலுத்தும் பிரபலங்களை பாராட்டி சான்றிதழ் அளித்து வருகிறது. அதன்படி மஞ்சு வாரியருக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளது. கடந்த 2021-22ம் ஆண்டுக்கான வரியை முறையாகக் கட்டியதால் இந்த சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது.
தற்போது மஞ்சுவாரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதேபோல மலையாள தயாரிப்பாளார் அந்தோணி பெரும்பாவூருக்கும் இந்த சான்றிதழ் கிடைத்துள்ளது. இவர் சமீபத்தில் வெளிவந்த லூசியர், த்ரிஷ்யம், மரைக்காயர் உள்ளபட 32 படங்களை தயாரித்துள்ளார். மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர், நண்பர்.