நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தலைப்பைப் பார்த்து கொஞ்சம் குழம்பி விட வேண்டாம். 'புஷ்பா 2' படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசி வருவதாக நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் பாகத்தை இன்னும் பெரிய அளவில் உருவாக்க வேண்டும் என இயக்குனர் சுகுமாரிடம் அல்லு அர்ஜுன் சொன்னதால் கடந்த சில மாதங்களாகவே திரைக்கதையை மாற்றி எழுதி வந்திருக்கிறார் இயக்குனர் சுகுமார். தற்போது இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தை சேர்த்திருக்கிறாராம் சுகுமார். அந்தக் கதாபாத்திரத்தில் தான் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கப் போகிறார்களாம்.
'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் இணைந்து நடித்தது படத்திற்கு பெரிய பலத்தைக் கொடுத்தது. அது போலவே, அவர்கள் இருவரும் மீண்டும் 'புஷ்பா 2' படத்தில் இணைய உள்ளார்கள். முதல் பாகத்திலேயே பகத் பாசில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 'விக்ரம்' கதாநாயகன் கமல்ஹாசன் மட்டும் 'புஷ்பா 2'வில் மிஸ்ஸிங் என்று சொல்லலாம்.
'புஷ்பா 2'வில் விஜய் சேதுபதி இணைவது பற்றி விரைவில் அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.