நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பஞ்சாபை சேர்ந்த கராத்தே வீராங்கனை அம்ரிந்த்பால். அவருக்கு திடீரென காலில் நரம்பு பிரச்னை ஏற்பட்டு அதற்காக அறுவை சிகிச்சை பெற வேண்டியது இருந்தது. இதற்கு போதிய பணமின்றி தவித்தார். நண்பர்களின் ஆலோசனைப்படி தனது நிலை குறித்து பாலிவுட் வில்லன் நடிகர் சோனுசூட்டிற்கு வேண்டுகோள் விடுத்தார். இதை தொடர்ந்து அவரை நேரில் சந்தித்த சோனுசூட் அவருக்கான மருத்து செலவு முழுவதையும் ஏற்றார். இது நடந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பயிற்சியில் ஈடுபட்ட அம்ரிந்த்பால் அகில இந்திய பெண்கள் கராத்தே போட்டியில் தங்கபதக்கத்துடன் சேம்பியன் ஆனார். பதக்கம் பெற்ற உடனேயே நடிகர் சோனுசூட்டை சந்தித்து அவரிடம் பதக்கத்தை வழங்கினார். இந்த நிகழ்வால் நெகிழ்ந்த சோனுசூட்
இதுகுறித்து கூறியிருப்பதாவது: மற்றவர்களின் வாழ்க்கையில் நாம் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்தை காணும் போது நம் வாழ்க்கையும் மதிப்புக்கு உள்ளாகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்ரிந்த்பால் என்ற கராத்தே வீராங்கனை முழங்கால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலையில் இருந்தார். அப்போது நான் அவரை சந்தித்தேன். அவர் பல கனவுகளுடன் இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது.
இதனையடுத்து அவருடைய கால் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய முடிவு செய்தேன். தற்போது அவர் முழுமையாக குணம் அடைந்து கையில் தங்கப் பதக்கத்துடன் என்னை வந்து சந்தித்தபோது, அவர் மீதான மதிப்பு எனக்கு மேலும் அதிகரித்துள்ளது. விரைவில் பர்மிங்காமில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் போட்டியிலும் இந்தியா சார்பில் அவர் விளையாட உள்ளார், அவர் இந்தியாவை மென்மேலும் பெருமைப்படுத்துவார் என்றும் நான் நம்புகிறேன் . இவ்வாறு சோனுசூட் தெரிவித்திருக்கிறார்.