அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை |
தமிழ் சினிமாவில் இன்னும் வைக்கப்படாத தலைப்புகள் எவ்வளவோ இருக்க, இதற்கு முன்பு வெளிவந்த பல படங்களின் தலைப்புகள் அடிக்கடி வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது படத் தலைப்புகள்தான் வைக்கப்பட்டு வந்தன. இவர்களது பழைய படங்களைப் பற்றி இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு அதிகம் தெரியாது. ஆனால், இன்றைய ரசிகர்களுக்கு அதிகம் தெரிந்த விஜய் படத் தலைப்புகளை அதற்குள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
பாலசேகரன் இயக்கத்தில், விஜய், சுவலட்சுமி நடித்து 1997ம் ஆண்டு வெளிவந்து 175 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம் 'லவ் டுடே'. அத்தலைப்பை தற்போது ஒரு புதிய படத்திற்கு வைத்துள்ளார்கள். 'கோமாளி' படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கி, கதாநாயகனாக நடித்து வரும் படத்திற்குத்தான் அந்தத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் இது குறித்து தங்களது கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் இன்று வெளியிட்டுள்ள 'லவ் டுடே' முதல் பார்வையில் கதாநாயகன் புகை பிடிக்கும் போஸ்டரை வெளியிட்டுள்ளதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.