நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த 2006ல் சுந்தர் சி நடிப்பில் வெளியான படம் தலைநகரம். இந்த படத்தில் முதன்முறையாக கதாநாயகனாகவும் மாறினார் சுந்தர்.சி. சுராஜ் இயக்கிய இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில் 16 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தலைநகரம் 2 என்கிற பெயரில் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஈசிஆர் மற்றும் வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் மாறி மாறி நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக லாலக் பால்வணி நடிக்க, முக்கிய வேடங்களில் தம்பி ராமையா மற்றும் பாகுபலி புகழ் காளகேயா பிரபாகர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபாகரின் பிறந்தநாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அதே நாளில் கொஞ்ச நேரம் கழித்து இந்தப்படத்தில் பிரபாகர் கதாபாத்திரம் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடுவது போன்று ஒரு காட்சியும் இருந்ததால் மீண்டும் படத்திற்காக ஒருமுறை கேக் வெட்டி அவர் பிறந்தநாளை கொண்டாடிய காட்சிகள் படமாக்கப்பட்டனவாம்.