‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
தொலைக்காட்சி சீரியல்களும் அதில் வரும் நடிகர் நடிகைகளும் மக்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக மாறி வருகிறார்கள். அதற்கேற்றார் போல் சோஷியல் மீடியாக்களிலும் அந்தந்த நடிகர்களை பின் தொடர்ந்து அவர்கள் பதிவிடும் அப்டேட்டுகளையும் தெரிந்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்களின் பெரும் வரவேற்புடன் ஹிட் சீரியலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவாவாக நடித்து வரும் வெங்கட்டும் பிரபலமான சின்னத்திரை நடிகராக உள்ளார்.
அவர் சமீபத்தில் தனது 11வது திருமண நாளை முன்னிட்டு விடுமுறை கொண்டாட்டமாக மனைவி மற்றும் மகளுடன் மாலத்தீவு சென்றுள்ளார். அங்கே அவர் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ஒருபுறம் லைக்ஸ் குவிந்து கொண்டிருக்க, நெட்டிசன்கள் அனைவரும் சீரியலை நினைவுப்படுத்தி, 'அங்க மூர்த்தி அண்ணன் நெஞ்சுவலில போராடிட்டு இருக்காரு. நீ ஊரு சுத்திட்டு இருக்கியா?' என நக்கலாக கமெண்ட் அடித்து வருகின்றனர். மாலத்தீவில் அவர் வெளியிட்ட போட்டோக்களை விடவும் நெட்டிசன்களின் கமெண்டுகள் தான் மீம் கண்டண்ட்டாக இணையத்தில் வைரலாகி வருகிறது.