Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமெரிக்க அரசு சிறப்பு விருந்தினராக வருமாறு ரஜினிக்கு அழைப்பு!

28 ஜன,2013 - 14:45 IST
எழுத்தின் அளவு:

சூப்பர் ஸ்டார் ரஜினியை தங்கள் அரசு விருந்தினராக வருமாறு அமெரிக்காவின் மேரிலான்ட் மாகாண அரசு அழைப்பு விடுத்துள்ளது.  மேரிலான்ட் மாகாணத்தின் வெளியுறவுத் துறை துணைச் செயலர் (அமைச்சர் ) டாக்டர் ராஜன் நடராஜன் இந்த அழைப்பினை ரஜினியை அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து வழங்கினார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் நூற்றாண்டுக்கொரு முறை வரும் 12.12.12 என்ற அபூர்வ தேதியில் அமைந்துள்ளதற்கு, மேரிலான்ட் மாகாண கவர்னர் திரு மார்ட்டின் ஓமாலி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை, டாக்டர் ராஜன் வாசித்து அளித்தார். அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

கவர்னர் மார்ட்டின் ஓமாலி தனது வாழ்த்துரையில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு, நீங்கள் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக நீண்ட காலம் வெற்றிகரமாக திகழ்வது மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த துறையில் பல சாதனைகளைச் செய்து, அளவிலா புகழை அடைந்துள்ளீர்கள் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த பிறந்த நாள் வாழ்த்தின் மூலம் நீங்கள் வளமாகவும், மகிழ்ச்சியாகவும், எல்லா வளமும் பெற்று, உலகெலாம் பரவியிருக்கும் உங்கள் பல கோடி ரசிகர்களின் ஆதரவுடன் மேலும் மேலும் வெற்றி பெற வேண்டும் என்று எங்களின் மேரிலாண்ட் மாகாண அரசாங்க வாழ்த்துச் சான்றின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாழ்த்துச் சான்றை சூப்பர் ஸ்டாரிடம் டாக்டர் ராஜன் வழங்கினார்.  மேரிலாண்ட் அரசின் பிரதிநிதி டாக்டர் ராஜனின் வாழ்த்தையும் அழைப்பையும் ஏற்ற சூப்பர் ஸ்டார் ரஜினி, நிச்சயம் அமெரிக்காவுக்கு வருவதாகத் தெரிவித்தார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, சூப்பர் ஸ்டாரிடம் பல கருத்துக்களையும் தகவல்களையும் பரிமாறிக் கொண்டார் டாக்டர் ராஜன்.

Advertisement
முதிர்ச்சியை மறைக்க உடற்பயிற்சி செய்யும் விக்ரம்!முதிர்ச்சியை மறைக்க உடற்பயிற்சி ... 27வது பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ருதிஹாசன்...! 27வது பிறந்தநாளை கொண்டாடிய ...

வாசகர் கருத்து

ரஞ்சித் சிங்க் - TOKYO,ஜப்பான்
29 ஜன,2013 - 10:50
 ரஞ்சித் சிங்க் His state is one of the highest taxed state. It is better to just go there and get the honor and say a few words. That is it. No need to invest your money there or start a factory there....Even better, not to learn any thing from there. There is not going to be anything useful for yourlife.
மூர்த்தி - chennai,இந்தியா
29 ஜன,2013 - 10:48
 மூர்த்தி ரஜினி சார் நீங்க ஒரு அதிசய மனிதர் உங்களை தவறாக விமர்சனம் செய்ரவங்கள் கூட ஆழ மனதில் நீங்கள் நல்ல குணம் கொண்டவர்தான்னு நினைப்பாங்க
அய்யா - chennai,இந்தியா
29 ஜன,2013 - 10:37
 அய்யா ரொம்ப தேவை. கருமம்.
ஆரூரன்.r - podicherry,இந்தியா
29 ஜன,2013 - 08:25
 ஆரூரன்.r சார் எப்படி ரஜினி சார் உங்களால் மட்டும் முடிகிறது ,எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு
Selva - Bangalore,இந்தியா
28 ஜன,2013 - 21:26
 Selva யாருப்பா இந்த கருப்பு பன்றி? என்னது, அமெரிக்க அரசு இந்த ஆளை அனுப்பி ரஜினியை வர சொன்னதாக்கும்? இதை நாங்க நம்பணுமாக்கும்?
gurunathan - singapore  ( Posted via: Dinamalar Android App )
28 ஜன,2013 - 20:56
gurunathan தலைவருக்கு இணை தலைவர் தான் எல்லா தகுதி்யும் தலைவருக்கு உண்டு வாழ்க தலைவர் வளர்க அவரது புகழ்
VELAN S - Chennai,இந்தியா
28 ஜன,2013 - 20:10
 VELAN S இந்த கிழவனை நேரில் பார்க்க வேண்டும் என்று ரஜினி ரசிகன் ராஜன் நினைத்திருப்பது பேட்டியில் நல்ல தெரிகிறது .
Shiva - Chennai  ( Posted via: Dinamalar Android App )
28 ஜன,2013 - 19:53
Shiva Congrats Rajni sir.. You deserve it..
kannan - chennai,இந்தியா
28 ஜன,2013 - 15:30
 kannan Thaliver is great. Valzga Rajini.
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mapla Singam
  Tamil New Film Maari
  • மாரி
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Karai Oram
  • கரை ஓரம்
  • நடிகர் : கணேஷ் பிரசாத்
  • நடிகை : நிகிஷா படேல்
  • இயக்குனர் :ஜே.கே.
  Tamil New Film Bahubali
  • பாகுபலி
  • நடிகர் : பிரபாஸ் ,701
  • நடிகை : அனுஷ்கா ,12
  • இயக்குனர் :எஸ்.எஸ்.ராஜமவுலி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in