நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

எந்த கதாபாத்திரம் என்றாலும் அதுவாகவே மாறிப்போய் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் மிகச்சில நடிகைகளின் ரேவதியும் ஒருவர். அதனால் தான் இந்த முப்பது வருடத்திற்கு மேலான அவரது திரையுலக பயணத்தில் மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ளார். அதேசமயம் நடிக்க வந்த காலத்திலிருந்து தற்போது வரை கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.. இந்த நிலையில் இந்த வருடம் அறிவிக்கப்பட்ட கேரளா அரசு விருது பட்டியலில் பூதக்காலம் என்கிற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான விருது ரேவதிக்கு அறிவிக்கப்பட்டது.
ஹாரர் திரில்லராக உருவாகியிருந்த இந்தப்படத்தில் கணவன் இல்லாத நிலையில் தனது மகனை வளர்க்க தனியாளாக போராடும் சராசரிப்பெண் கதாபாத்திரத்தில் ரேவதி நடித்துள்ளார். இந்த நிலையில் தங்களது சக நடிகையான ரேவதி முதன்முறையாக கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளதை அவரது தோழிகளாக எண்பதுகளில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்த குஷ்பு, சுகாசினி, லிசி, அம்பிகா ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.