நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்திற்குக் கிடைத்த வெற்றி சில பல தடைகளையும் தகர்த்தெறிந்துள்ளது. கமல்ஹாசனின் திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 400 கோடி வசூலைக் கடப்பது சாதாரண விஷயமல்ல.
கமல் நடித்து அடுத்து வெளிவரும் படங்களுக்கும் நல்ல வியாபாரம், வசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தானாகவே வந்துவிடும். அதனால், கடந்த இரண்டு வருடங்களாக முடங்கி இருக்கும் 'இந்தியன் 2' படத்திற்கு தற்போது உயிர் வந்துள்ளது.
ஷங்கர், தயாரிப்பு நிறுவனமான லைக்கா இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையால் நீதிமன்றம் வரை சென்று பின் பஞ்சாயத்து நடந்து முடிந்துள்ளது. 'இந்தியன் 2' படத்தில் உதயநிதி இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
ஷங்கர், கமல்ஹாசன், லைக்கா, உதயநிதி தரப்பு என அமர்ந்து பேசி ஒரு சுமூகமான முடிவுக்கு வந்துள்ளார்களாம். ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிக்க இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாம். அது முடிந்ததுமே 'இந்தியன் 2' ஆரம்பமாகிவிடும் என்று சொல்கிறார்கள்.