நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஆர்ஜே பாலாஜி, என்ஜே சரவணன் இயக்கத்தில், ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'வீட்ல விசேஷம்'. இப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்களது வெற்றியைக் கொண்டாடினர்.
அப்போது ஆர்ஜே பாலாஜி படக்குழுவினருக்கு பரிசுகளை வழங்கினார். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராகுலுக்கு விலை உயர்ந்த வாட்ச், தன்னுடன் இணைந்து படத்தை இயக்கிய சரவணனுக்கு தங்கச் சங்கிலி, தனது உதவி இயக்குனர்களுக்கு 1 லட்ச ரூபாய் என பரிசுகளை வழங்கினார். பொதுவாக படம் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர் தான் படக்குழுவினருக்கு பரிசுகளை வழங்குவார்கள். ஆனால், படத்தின் நாயகன் என்பதால் பாலாஜி இந்த பரிசுகளை வழங்கியிருப்பார் போலிருக்கிறது.
இருப்பினும் உதவி இயக்குனர்களுக்காக வழங்கப்பட்ட பரிசுத் தொகைக்கான 'செக் மாடல் ஷீட்'ல் எண்ணில் 1 லட்சம் என்றும், எழுத்தில் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் என்றும் இருக்கிறது. அந்தத் தவறைக் கூட கவனிக்கவில்லை போலிருக்கிறது.