மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கடற் கொள்ளையர்களை கொண்டு உருவாக்கப்பட்ட பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படங்கள் உலக புகழ்பெற்றவை. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த பேண்டசி படம். இந்த படத்தின் நாயகன் ஜாக் ஸ்பேரோவாக நடித்தவர் ஜானி டெப். காமெடி கலந்த ஆக்ஷன்தான் இவரது ஸ்டைல். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுக்க ஜானி டெப்புக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதுவரை வெளிவந்த 5 பாகத்திலும் ஜானி டெப் தான் நாயகன். இப்போது 6வது பாகம் தயாராக உள்ளது. இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் எழுதிய ஒரு கட்டுரையில் ஜானி டெப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், குடித்து விட்டு இயற்கைக்கு மாறாக உறவு கொண்டதாகவும் எழுதியிருந்தார், இந்தக் கட்டுரை வெளியான சில நாட்களில் பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் படத்தின் 6வது பாகத்திலிருந்து ஜானி டெப்பை நீக்கியது டிஷ்னி நிறுவனம்.
அதன்பிறகு மனைவி மீது ஜானி டெப் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் ஜானி டெப் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து, ஜானி டெப்பிற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை இழப்பீடாக வழங்கும்படி ஆம்பர் ஹெர்ட்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் இழந்த இமேஜை மீண்டும் பெற்றார் ஜானி டெப்.
இந்த நிலையில் டிஷ்னி நிறுவனம் ஜானி டெப்புக்கு மன்னிப்பு கடிதம் வழங்கி உள்ளதாகவும், அதோடு 6ம் பாகத்தில் நடிக்க அழைத்திருப்பதுடன் அதற்காக 301 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 2500 கோடி) சம்பளமாக தருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இதை ஜானி டெப் தரப்பில் மறுத்துள்ளனர். அந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜானி - ஆம்பர் ஹெர்ட் வழக்கு நடந்த போது, "இனி 300 மில்லியன் டாலர்கள் கொடுத்தால் கூட 'பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்' படத்தில் நடிக்க மாட்டேன்" என ஜானி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.