நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
சமூக வலைத்தளங்களில் நடிகைகள் பதிவிடும் பதிவுகளுக்குத்தான் பொதுவாக அதிக லைக்குகள் கிடைக்கும். அவர்கள் ஒரு சில புகைப்படங்களைப் பதிவிட்டாலே 10 லட்சம், 20 லட்சம் லைக்குகள் எளிதாகக் கிடைத்துவிடும்.
ஆனால், முன்னணி நடிகர்கள் பதிவிடும் பதிவுகளுக்கு சில லட்சம் லைக்குகள் தாண்டினாலே அதிகம். தமிழில் முன்னணி நடிகர்களில் சூர்யா சமூகவலைதளங்களில் இருக்கிறார். பேஸ்புக்கில் 67 லட்சம் பாலோயர்கள், டுவிட்டரில் 78 லட்சம் பாலோயர்கள், இன்ஸ்டாவில் 47 லட்சம் பாலோயர்களை வைத்திருக்கிறார் சூர்யா.
'விக்ரம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சிறப்பாக நடித்ததற்காக கமல்ஹாசன் அவருக்கு தான் பயன்படுத்தி வந்த ரோலக்ஸ் வாட்ச் ஒன்றைப் பரிசாக அளித்தார். அது பற்றிய பதிவை சூர்யா தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். அதில் அவருடைய இன்ஸ்டா பதிவுக்கு மட்டும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளது.
தமிழ் நடிகர் ஒருவரின் பதிவுக்கு இன்ஸ்டாவில் இவ்வளவு லைக்குகள் கிடைத்துள்ளது இதுவே முதல் முறை. 47 லட்ச ரூபாய் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச் பற்றிய பதிவுக்கு 20 லட்சம் லைக்குகள் கூட கிடைக்கவில்லை என்றால் எப்படி ?.