ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராதா மகள் கார்த்திகா "கோ" படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். தற்போது "அன்னக்கொடியும் கொடிவீரனும்" படத்தில் புதுமுகம் லட்சுமணனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் மலையாளப் படமொன்றில் சீனியர் நடிகரும் மலையாள சூப்பர் ஸ்டாருமான மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தின் பெயர் லீலா. பிரபல இயக்குனர் ரஞ்சித் இயக்குகிறார். குறுகிய காலத்திற்குள்ளேயே சீனியர் நடிகருடன் நடிக்க வந்து விட்டீர்களே என்று கேட்டால் "மம்முக்காவை சீனியர் நடிகர் என்று சொல்லாதீர்கள் சூப்பர் ஸ்டார் என்று சொல்லுங்கள். தமிழில் ரஜினியுடன் நடிக்க எந்த நடிகைக்காவது கசக்குமா? அதுமாதிரிதான் கேரளாவில் மம்முக்காவுடன் நடிப்பது. நான் சின்ன வயதிலிருந்து பார்த்து பார்த்து வியந்த ஒருவருடன் நடிப்பதை பாக்கியமாக கருதுகிறேன். அதோடு இந்தப் படம் ஹீரோயின் சப்ஜெக்ட், படத்தின் தலைப்பான லீலா ரோலில் நான் நடிக்கிறேன். இந்தப் படம் நிச்சயம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும்" என்கிறார் கார்த்திகா.