நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விக்ரமன் இயக்கத்தில், எஸ்.எ.ராஜ்குமார் இசையமைப்பில், இரு வேடங்களில் சரத்குமார், தேவயானி, ராதிகா, பிரியா ராமன், மணிவண்ணன், சுந்தர்ராஜன், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'சூர்ய வம்சம்'. இப்படம் வெளிவந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது.
சரத்குமார் நடித்து வெளிவந்த வெற்றிப் படங்களில் நல்ல வசூலைக் குவித்த படங்களில் இதுவும் ஒன்று. தெலுங்கில் வெங்கடேஷ், மீனா நடிக்க 'சூர்யா வம்சம்' என்ற பெயரிலும், ஹிந்தியில் அமிதாப்பச்சன், சௌந்தர்யா நடிக்க 'சூர்ய வன்ஷம்' என்ற பெயரிலும், கன்னடத்தில் விஷ்ணுவர்தன், இஷா கோபிகர் நடிக்க 'சூர்ய வம்சா' என்ற பெயரிலும், இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. மூன்று மொழிகளிலுமே படம் வெற்றி பெற்றது.
கிராமத்தில் மதிப்புமிக்க பெரிய குடும்பம் சரத்குமாருடையது. சரத்குமாரின் மகன் சரத்குமார் அதிகம் படிக்காதவர். சரத்குமாரின் சகோதரியைத் திருமணம் செய்து கொள்கிறார் தேவயானியின் சகோதரர். குடும்பத்தில் அனைவரும் மகன் சரத்குமாரை ஒதுக்குவது தெரிந்து அவர் மீது காதல் கொள்கிறார் தேவயானி. இருவரும் அப்பா சரத்குமாரின் அனுமதி இல்லாமல் திருமணம் செய்து கொள்ள அவர்களை வீட்டிற்குள் சேர்க்க மறுக்கிறார் அப்பா. மகன் சரத்குமார், தேவயானி இருவரும் தனியாக வீடு பார்த்து வசிக்கிறார்கள். தேவயானி படித்து அந்த மாவட்டத்திற்கே கலெக்டராக வருகிறார். அவரது சரத்குமார் தொழில் செய்து முன்னேறி தொழிலதிபராகிறார். அப்பா, மகன் இடையிலான விரோதம் முடிவுக்கு வந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இரு வேடங்களில் சரத்குமார் சிறப்பாக நடித்த படம். அப்பா சரத்குமார் கோபக்காரராகவும், மகன் சரத்குமார் அமைதியானவராகவும் நடித்த படம். சரத்குமார் - தேவயானி ஜோடி பொருத்தமான வெற்றி ஜோடி என இப்படத்தில் பெயரெடுத்தது.
எஸ்ஏ ராஜ்குமார் இசையில் “ரோசாப்பூ, சலக்கு சலக்கு, நட்சத்திர ஜன்னலில், திருநாளு தேரழகா' ஆகிய அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. விக்ரமனின் இயக்கத்தில் படத்தில் இடம் பெற்ற சென்டிமென்ட் காட்சிகள் அன்றைய ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கண்ட படம் 'சூர்ய வம்சம்'.