நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன் பிக்பாஸ்- 4 நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். அதோடு அவருக்கு சினிமா வாய்ப்புகளும் அடுத்தடுத்து தேடிச்சென்றன. இதன் காரணமாக சமீபத்தில் வெளியான விக்ரம் மற்றும் வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்திருந்தார் ஷிவானி. அதையடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் மற்றும் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் என பல படங்களில் நடித்திருக்கிறார் ஷிவானி. அதோடு இவர் சோசியல் மீடியாவிலும் ரொம்ப பிசியாக இருக்க கூடிய நடிகை.
ஒவ்வொரு நாளும் தனது கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ஏராளமான ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையணிந்த எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களையும் வழக்கம்போல் அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.