நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ்த் திரையுலகின் நம்பர் 1 நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் புதுமண ஜோடி தாய்லாந்தில் தங்களது ஹனிமூனைக் கொண்டாடியது. அங்கிருந்து அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
நேற்றுடன் அவர்களது ஹனிமூனை முடித்துவிட்டு, அதற்காக நன்றிக் குறிப்பையும் அவர் பதிவிட்டுள்ளார். ஹனிமூனை ஏற்பாடு செய்து தந்த டிராவல் ஏஜென்சி, தங்கியிருந்த ஹோட்டல், அந்த ஹோட்டலின் செப் என அனைவருக்கும் மனப்பூர்வ நன்றியைத் தெரிவித்துள்ளார் விக்கி. அற்புதமான சூழலுக்காகவும், சிறப்பான உணவுக்காகவும் மீண்டும் ஒரு முறை வருவோம் என மனதாரப் பாராட்டியுள்ளார் விக்கி. வழக்கம் போல மனைவி நயன்தாராவுடனான சில பல புகைப்படங்களும் அந்தப் பதிவில் அடக்கம்.