500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
லோகேஷ் கனகராஜ் பழைய பாடல்களை தனது படத்தில் ஒரு சில காட்சிகளில் ரசிகர்கள் ரசிக்கும்படி வைப்பது வழக்கமான ஒன்று . 'கைதி' படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் 'ஆசை அதிகம் வச்சு' எனும் பாடல் பயன்படுத்தினர் . அந்தப் பாடல் மேலும் பிரபலமானது.
அந்த வகையில் 'விக்ரம்' படத்தில் சக்கு சக்கு வத்திக்குச்சி பாடல் ஒரு சண்டைக் காட்சியின் போது பயன்படுத்தப்பட்டது . அந்தப் பாடல் ஒலிக்கும்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது . அந்தப் பாடல் 1995 ஆம் ஆண்டு வெளியான 'அசுரன்' படத்தின் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பாடலில் மன்சூர் அலி கான் நடனம் ஆடியிருப்பார். சக்கு சக்கு வத்திக்குச்சி பாடல் தற்போது டிரெண்டிங் ஆகியுள்ளதை அடுத்து மன்சூர் அலி கான் தற்போது அந்தப் பாடலுக்கு மீண்டும் நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.