500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தனுசுடன் நித்யாமேனன், ராசி கண்ணா ,பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரைக்கு வருகிறது. சில ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது தாய்க்கிழவி என்ற முதல் லிரிக் பாடலை வெளியிட்டுள்ளனர். அனிருத் இசையில் தனுஷ் எழுதி, பாடிய இந்த பாடலின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த பாடலில், என் முக்கத்துட்டு கப்பக்கிழங்கே, அக்கா பெத்த அச்சுமுறுக்கே, அவ அன்புல தாயி, புத்தியில கிழவி, மொத்தத்தில் அவதான் தாய்க்கிழவி என்று அப்பாடல் வரிகள் தொடங்குகிறது. 24 மணிநேரத்திற்குள்ளாகவே 28 லட்சம் பார்வைகளை கடந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
முன்னதாக சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் இந்த பாடல் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர் . மேலும் இந்த நிகழ்ச்சியில் மித்ரன் ஜவஹர், ஓம் பிரகாஷ், நடன இயக்குனர் சதிஷ் , நடிகர் கணேஷ் , ஆர்த்தி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.